மதுரை மாவட்டம் சோழவந்தான் இரட்டை அக்ரஹாரத்தில் ஸ்ரீ ராம பக்த சபா சார்பில் ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு சீதா கல்யாணம் நடைபெற்றது. ராம நாம லட்ச்சார்சனை நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு திவ்ய நாமம் ,டோலோத்சவம் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை காலை உஞ்சவிருத்தியுடன் நிகழ்ச்சி தொடங்கியது. 10 மணிக்கு சீர் எடுத்து வந்து சாய் பிரசாத் பாகவதர் மற்றும் பஜனை குழுவினர் தலைமையில் பஜனை பாடல்கள் பாடி ராமர் சீதா கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து பூஜையில் வைக்கப்பட்ட தேங்காய் ரூபாய் 10 ஆயிரத்திற்கு கோபாலகிருஷ்ணன் தம்பதியினர் ஏலம் எடுத்தனர் இந்த ஏலத்தொகை பாண்டுரங்கன் கோவில் அன்னதானத்திற்கு கொடுக்கப்படும் என்று தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு திருமாங்கல்ய கயிறு மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ராம பக்த சபா நிர்வாகிகள் ஸ்தாபகர் காசி விஸ்வநாதன், தலைவர் வரதராஜ் பண்டிட் ஜி, செயலாளர் வெங்கட்ராமன், பொருளாளர் சந்திரசேகரன் ,உப தலைவர் ரமணி, இணைச் செயலாளர் விஸ்வநாதன், கமிட்டியாளர்கள் மகாதேவன் ,பிரசாத், வெங்கட ரமணன், நாராயணன், சுப்புராம், நாகேஸ்வரன் என்ற ரமேஷ், கண்ணன், ஸ்ரீ சேகர், ஸ்ரீ ராமசுப்பிரமணியன் மற்றும் பலர் செய்திருந்தனர். ராம நவமி நிகழ்ச்சியில் கலைவாணி பள்ளி நிர்வாகி வள்ளி மயில் மணி முத்தையா கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார் அவருக்கு விழா குழுவினர் சார்பாக மரியாதை செய்யப்பட்டது

You must be logged in to post a comment.