மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சியில் ஆதிதிராவிடர்களுக்கு சொந்தமான மயானத்தில் மின்மோட்டாரில் ஏற்பட்ட பழுது காரணமாக கடந்த 10 நாட்களுக்கு மேலாக தண்ணீர் வராததால் இறந்தவர்களுக்காக இறுதி சடங்கு செய்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர் மேலக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட மேலக்கால் கிராமத்தில் ஆதிதிராவிடர் மக்கள் சுமார் 2000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர் இவர்களுக்காக மேலக் கால் மதுரை செல்லும் சாலையில் மயானம் உள்ளது இந்த மயானத்தில் உள்ள மின் மோட்டார் பழுதாகி 10 நாட்களுக்கு மேலாகிவிட்டது இதனால் மயானத்திற்கு உள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீர் இல்லாமல் உள்ளது மயானத்தில் தண்ணீர் வசதி இல்லாததால் இறந்தவர்களுக்காக இறுதி சடங்கு செய்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாகவும் இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை எடுத்துக் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் ஆகையால் வாடிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பழுதடைந்த மின் மோட்டாரை சரி செய்து மயானத்தில் தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்

You must be logged in to post a comment.