திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கொண்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மொட்டையாண்டி மகன் பழனி குமார் வயது 40 இவர் சென்ட்ரிங் கட்டட வேலை பார்த்து வருகிறார் இன்று காலை வேலை விஷயமாக இரு சக்கர வாகனத்தில்மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தன்ச்சியம் பிரிவு தனியார் சித்தா மருத்துவமனை அருகில் மதுரை திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது பெங்களூரில் இருந்து மதுரை நோக்கி வந்த ஆம்னி பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியதில் சென்ட்ரிங் காண்ட்ராக்டர் பழனிக்குமார் சம்பவ இடத்தில் பலியானார் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாடிப்பட்டி போலீசார் பிணத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் இறந்த பழனி குமாருக்கு இந்துமதி என்று மனைவியும் லோகேஷ் தர்ஷினி ஆகிய குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

You must be logged in to post a comment.