மதுரை மாவட்டம்
இரும்பாடி வைகை ஆற்றிக்கு செல்லும் பாதையானது பொதுமக்கள் செல்லக்கூடிய வகையில் போதிய இடவசதியுடன் இருந்த நிலையில் இரும்பாடி மன்னாடி மங்கலம் வைகை ஆற்று பாலம் கட்டி முடித்த பின்பு இரும்பாடி வைகை ஆற்றிற்கு செல்வதற்கான பாதையின் அகலத்தை சிறியதாக்கி வைகை ஆற்றுக்கு பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது
குறிப்பாக இரும்பாடி சின்ன இரும்பாடி கருப்பட்டி பாலகிருஷ்ணாபுரம் கரட்டுப்பட்டி மட்டப்பாறை சாலாச்சிபுரம் ஆகிய கிராமங்களில் திருவிழா நடத்துபவர்கள் கரகம் எடுப்பதற்கும் முளைப்பாரி கரைப்பதற்கும் மற்றும் பல்வேறு காரணங்களுக்காகவும் இரும்பாடி வைகை ஆற்றிற்கு சென்று வந்து கொண்டிருந்தனர் சுமார் 20,000த்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த வைகை ஆற்று பாதையை பயன்படுத்தி வந்தனர் இந்த நிலையில் கடந்த ஆண்டு இரும்பாடி மன்னாடிமங்கலம் இடையே வைகை ஆற்றில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ள நிலையில் பாலம் கட்டும்போது வைகை ஆற்றில் பொதுமக்கள் பயன்படுத்தும் பாதையின் அளவை குறைத்து ஒருவர் மட்டும் சென்று வரக்கூடிய அளவில் மாற்றி விட்டதாக கூறப்படுகிறது இது குறித்து சில மாதங்களுக்கு முன்பு இரும்பாடி ஊராட்சி தலைவராக இருந்த பண்ணை செல்வம் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வாடிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் வாடிப்பட்டி வட்டாட்சியர் மதுரை மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு இரும்பாடி வைகை ஆற்றின் பாதையை அகலப்படுத்தி தரவேண்டும் என மனு அளித்திருந்தார் ஆனால் அதிகாரிகள் இதுவரை எந்த பதிலும் தரவில்லை ஆகையால் தற்போது நடைபெறும் திருவிழாவில் வைகை ஆற்றிற்கு செல்லும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர் ஆகையால் பொதுமக்களின் நலன் கருதியும் திருவிழாவின் முக்கியத்துவம் கருதியும் இரும்பாடி வைகை ஆற்று பாதையை அகலப்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீண்டும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளார்

You must be logged in to post a comment.