.மதுரை மாவட்டம் சோழவந்தான் பூ மேட்டு தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ உச்சி மாகாளியம்மன் கோவில் பங்குனி திருவிழா செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது பூமேட்டு கிராமத்தைச் சேர்ந்த கிராம பொதுமக்கள் பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வைகையாற்றுக்கு சென்று பூஜைகள் செய்து ஊர்வலமாக வந்தனர் பின்னர் உச்சி மாகாளியம்மனுக்கு சிறப்பு அர்ச்சனை தீபாராதனை நடைபெற்றது பின்னர் பால்குடம் அக்னி சட்டி எடுக்கும் பொதுமக்கள் முளைப்பாரி எடுக்கும் தாய்மார்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர்
,முளைப்பாரி பதியமிடல் நடைபெற்றது. சிறப்பு அபிஷேக அர்ச்சனைகள் செய்யப்பட்டது. அடுத்த வாரம் பால்குடம், முளைப்பாரி ஊர்வலம் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை எம் வி எம் குழும சேர்மன் மணி முத்தையா, லயன் டாக்டர் மருதுபாண்டியன், கலைவாணி பள்ளி நிர்வாகி வள்ளிமயில் மற்றும் பூமேட்டு தெரு கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
You must be logged in to post a comment.