.மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமம் அருள்மிகு மண்டு கருப்பு அருள்மிகு காளியம்மன் திருக்கோவில் 12வது ஆண்டு பங்குனி திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் தொடங்கி திங்களன்று குத்து விளக்கு பூஜை நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை காலை வைகை ஆற்றில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து திருக்கோவில் முன்பாக அன்னதானம் நடைபெற்றது. மாலை சக்தி கரகம் எடுத்து முளைப்பாரி ஊர்வலம் நடைபெறுகிறது. புதன்கிழமை பொங்கல் வைத்து கிடா வெட்டுதல் மாலை மாவிளக்கு எடுத்தல், கரகாட்டம் நடைபெறுகிறது வியாழக்கிழமை சக்தி கரகம் வைகை ஆற்றில் கரைத்தல் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவடைகிறது விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர் இதில் மேலக்கால் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

You must be logged in to post a comment.