சோழவந்தான் ஜெனகைமாரியம்மன் கோவில் மூன்றுமாத கொடியேற்றம் விழா நடந்தது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் மிகவும்பிரசித்தி பெற்ற கோவிலில் ஒன்றாகும்.இங்கு வருடந்தோறும் வைகாசி அமாவாசைக்குப் பின்னர் வரும் திங்கட்கிழமை திருவிழா கொடியேற்றம் நடைபெறும் . இதைத்தொடர்ந்து 17 நாட்கள் திருவிழா சிறப்பாக நடைபெறும்.

இதற்கு முன்பாக பங்குனி மாத அமாவாசைக்குப் பின்னர் வரும் திங்கட்கிழமை சுற்றுப்புற கிராம பக்தர்களுக்கு திருவிழா நடத்துவதற்கு முன்பாக அறிவிப்பாக மூன்று மாத கொடியேற்று விழா நடைபெறும்.இதேபோல் இந்த ஆண்டு திருவிழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.இதற்கான 3மாத கொடியேற்று விழா நடந்தது. வான வேடிக்கை மேளதாளத்துடன் சண்முகவேல் அர்ச்சகர் மூன்று மாத கொடிக்கம்பத்தை எடுத்து வந்தார் இவருடன் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பின் தொடர்ந்து வந்தனர். சில பக்தர்கள் சாமியாடி வந்தனர் மூன்று மாதக் கொடி கம்பம் எடுத்துக் கொண்டு கடைவீதி,தெற்குரதவீதி,மேலரதவீதி, வழியாக வைகைஆற்றுக்குச் சென்று அங்கு மூன்று மாத கம்பத்தை வைத்து பூஜைகள் நடந்தது இதைத் தொடர்ந்து வடக்குரதவீதி,கடைவிதி, மாரியம்மன்சன்னதி வழியாக கோவிலைவந்தடைந்தனர். கோவில் முன்பாக உள்ள மூன்று மாத கொடிபீடத்தில் மூன்று மாதகொடி ஏற்றும் விழா நடந்ததுபின்னர்.பூஜைகள் நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டது.செயல்அலுவலர்இளமதி, கோவில் பணியாளர்கள் மற்றும் உபயதாரர் சோழவந்தான் காவல் ராசுஅம்பலம் குடும்பத்தினர் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். முன்னதாக காலை மூன்று மாத கொடியேற்றுவதற்கான கொடிமரம் இங்குள்ள அக்கசாலை விநாயகர் கோவிலில் மேளதாளத்துடன் ஊர்வலமாக இருந்து கோவிலுக்கு கொண்டு வந்தனர். இதில் ஆச்சாரியார்கள், கோவிலை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். சோழவந்தான் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். சோழவந்தான் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார்,சப் இன்ஸ்பெக்டர் முருகேசன் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள்காமாட்சி அழகர்சாமி உட்பட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!