உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கடந்த 29ஆம் தேதி தமிழக முழுவதும் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் முறையான ஏற்பாடுகள் செய்யாத நிலையில் பல இடங்களில் கடமைக்காக கிராம சேவை கூட்டம் நடைபெற்றதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் சாக்கடை குடிதண்ணீர் குப்பைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மோசமாக உள்ளதாக ஊராட்சி செயலாளர் விக்னேஷிடம் சரமாரியாக கேள்வி கேட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
கிராம சபை கூட்டம் நடைபெற்ற இடத்தில் கிராம சபை கூட்டம் குறித்த அறிவிப்பு பேனர் கூட வைக்க முடியாத நிலையில் ஊராட்சி செயலாளர் இருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்
குறிப்பாக காமாட்சி அம்மன் கோவில் தெருவில் சாக்கடை பல நாட்களாக தேங்கி கிடப்பதாகவும் இதுகுறித்து ஊராட்சி செயலாளரிடம் தகவல் தெரிவித்தால் பொதுமக்களின் புகாரை உதாசீனப்படுத்துவதாகவும் கூறுகின்றனர் விக்கிரமங்கலம் மெயின் ரோட்டில் திருப்பதி மஹால் எதிரில் பல ஆண்டுகளாக கழிவுநீர் தேங்கி கிடப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதாக அந்த பகுதி பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தில் சரமாரியாக கேள்வி கேட்டனர் இதனால் செய்வதறியாது திகைத்த ஊராட்சி செயலாளர் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறினார் அதனை ஏற்க மறுத்த பொதுமக்கள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவாறு இருந்தனர் மேலக்கால் ஊராட்சி செயலாளராக உள்ள விக்னேஷ் வாடிப்பட்டி அருகே உள்ள விராலிப்பட்டி ஊராட்சி செயலாளராகவும் பொறுப்பு வகிப்பதால் இரண்டு ஊராட்சிகளிலும் அடிப்படை வசதிகள் செய்ய முடியாத நிலை ஏற்படுவதாக பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது ஆகையால் இது குறித்து வாடிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் இரண்டு ஊராட்சிகளிலும் நேரில் ஆய்வு செய்து அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் மேலும் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கும் ஊராட்சி செயலாளர் முறையாக வருவதில்லை ஊராட்சி அலுவலகத்திற்கு எப்போது சென்றாலும் பூட்டியே கிடப்பதாக புகார் தெரிவிக்கின்றனர் ஆகையால் ஊராட்சி மன்ற அலுவலகத்தை தினசரி திறந்து பொதுமக்களின் குறைகளை கேட்க வேண்டும் எனவும் அரசுக்கு மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்
You must be logged in to post a comment.