சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் கடந்த சில தினங்களாக இரவு 12 மணிக்கு மேல் தொடர்ச்சியாக மின்தடை செய்யப்படுகிறது 12 மணிக்கு மேல் ஏற்படும் மின்தடையானது அதிகாலை 5 மணி வரை சரி செய்வதில்லை இதன் காரணமாக பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் தேர்வுக்கு தயாராவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது குறிப்பாக இரவு 11 மணி 12 மணி வரை தேர்வுக்காக படிக்கும் மாணவிகள் அசந்து தூங்கும் நேரங்களில் மின்தடை செய்யப்படுவதால் மாணவிகளின் தூக்கம் கலைவதுடன் மறுநாள் காலை தேர்வு எழுதும் போது உடல் சோர்வு ஏற்பட்டு தேர்வு எழுதுவதில் சிரமம் இருப்பதாக மாணவ மாணவிகள் கூறுகின்றனர் இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால் முறையான பதிலை எந்த அதிகாரியும் கூறுவதில்லை மேலே மின்தடை ஏற்படுத்துகிறார்கள் எங்களுக்கு ஒன்றும் தெரியாது என அலட்சியமாக பதில் கூறுகின்றனர் ஆகையால் பத்தாம் வகுப்பு தேர்வுக்கு தயாராகும் மாணவ மாணவிகளின் கல்வி நலனை கருத்தில் கொண்டு இரவு நேரங்களில் ஏற்படும் மின்தடையை சரி செய்ய வேண்டும் என மாணவ மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்

You must be logged in to post a comment.