மதுரை கீழமாத்தூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் யூனியன் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் இந்த நிலையில் கீழமாத்தூர் ஆர் சி தெருவை சேர்ந்த பாப்பாத்தி என்பவர் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் தெருவில் கழிப்பறை வசதி இல்லாததால் பெண் பிள்ளைகளை திறந்தவெளியில் கழிப்பறைகளுக்கு அனுப்புவதாக அதிகாரியிடம் புகார் கூறி சரமாரியாக கேள்விகள் கேட்டனர் மேலும் பராமரிப்பு பணிக்காக ஊராட்சி அலுவலகத்தில் மனு அளித்து ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகிய நிலையில் இதுவரை ஊராட்சி நிர்வாகம் சார்பில் எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை ஆகையால் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் வீடு உள்ளதால் உயிர் பயத்தில் வாழ்வதாக கூறினார் அதிகாரிகள் எனது வீட்டை நேரில் வந்து பார்த்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அடிப்படை வசதி செய்து தருவதில் ஊராட்சி நிர்வாகம் பாரபட்சம் காட்டுவதாகவும் பொது மக்களின் எந்த ஒரு கோரிக்கைகளையும் நிறைவேற்ற முன்வரவில்லை எனவும் புகார் கூறினார் அதிகாரி முன்னிலையில் 5க்கும் மேற்பட்ட பெண்கள் சரமாரியாக கேள்வி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் விரைவில் இதுகுறித்து மேல் அதிகாரிகளிடம் கலந்து பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர் மேலும் கிராமம் மறுவாழ்வு திட்டத்தின் தற்காலிக பணி வழங்குவதிலும் பாரபட்சம் காட்டுவதாகவும் புகார் தெரிவித்தனர் இதனால் கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது ஒரு வழியாக பொதுமக்களை சமாளித்து கிராம சபை கூட்டத்தை அதிகாரிகள் முடித்து சென்றனர்

கீழமாத்தூர்கிராம சபை கூட்டத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்வி கேட்ட பொதுமக்களால் பரபரப்பு
தண்ணீர் தினத்தை முன்னிட்டு தமிழக முழுவதும் கிராம சபை கூட்டங்கள் நடைபெறும் என அரசு அறிவித்திருந்த நிலையில் மதுரை மாவட்டம் கீழமாத்தூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கழிப்பறை வீடு மராமத்து தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக செய்து தரவில்லை என அதிகாரியிடம் பொதுமக்கள் சரமாரி கேள்வி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
You must be logged in to post a comment.