மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலையில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி முன்னாள் எம் எல் ஏ எஸ் ஆண்டித்தேவர் 16 ம் ஆண்டு நினைவேந்தல் நடைபெற்றது.

மதுரை மேற்கு மாவட்டம் அகில இந்திய பார் வர்ட் பிளாக் கட்சி முன்னாள் எம் எல் ஏ எஸ் ஆண்டித்தேவர் 16 ம் ஆண்டு நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு ஆண்டித்தேவர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மற்றும் பி கே மூக்கையா தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மதுரை மேற்கு மாவட்டம் பொதுச் செயலாளர் மணிகண்டன் தலைமையில் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு ரெட் காசிமாயன் மாநில செயலாளர்கள் பாஸ்கர பாண்டியன் ஐ ராஜா மாநில வழக்கறிஞர் திருப்பதி முன்னிலையில் சிறப்பு அழைப்பாளராக மாநிலத் தலைவர் சி முத்துராமலிங்கம் கலந்து கொண்டு பேசினார். நகரச் செயலாளர் சபரிராஜன் செல்லம்பட்டி கே பி ஆனந்த் கிருபாகரன் முத்துக்குமார் நிலை மாலை கண்ணன் மற்றும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
Like this:
Like Loading...
Related
You must be logged in to post a comment.