மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேனி ரோடு முருகன் கோவில் அருகில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் சார்பில் பாலை ரோட்டில் கொட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் மாவட்ட தலைவர் ஏ.சி வெண்மணிச் சந்திரன் தலைமையில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் மாவட்ட தலைவர் பி பெரிய கருப்பன் முன்னிலையில் மாநிலத் தலைவர் கே முகமது அலி மாநில பொதுச் செயலாளர் நாமக்கல் பி பெருமாள் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க மாவட்ட செயலாளர் எம் உக்கிரபாண்டி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் மாவட்டச் செயலாளர் சி முத்துப்பாண்டி மாவட்டத் துணைத் தலைவர் சடையாண்டி என்ற சேகர் மாவட்ட பொருளாளர் கே இன்பராஜ் கீரிப்பட்டி பாண்டி மேக்கிழார் பட்டி செல்லையா முத்துப்பாண்டிபட்டி லோக மணி நக்கலைப்பட்டி மகேஸ்வரன் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் நல சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பசுமாடுகளுடனும் பாலை ரோட்டில் கொட்டியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கைகளாக ஒரு லிட்டருக்கு ரூபாய் பத்து விலை உயர்த்தி பசும்பால் ரூபாய் 45 என விலை உயர்த்தி அறிவித்திட வேண்டும் தமிழ்நாடு அரசு அறிவித்த ஊக்கத் தொகையை ரூபாய் 3 ஆரம்ப சங்கங்களின் மூலம் உறுப்பினர்களின் வங்கி கணக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்திடுக பாலை கிராமங்களில் பிஎம் சி யில் இருந்து ஒன்றியத்திற்கு எடுத்துச் செல்லும்போது தரம் எடை குறித்து கொடுக்க வேண்டும் மதுரை ஆவின் லாபத்தில் 50 சதவீத போனஸ் உடனே வழங்கிடுக 50 சதவீத மானியத்தில் கால்நடை தீவனம் வழங்கிட கோரிக்கை வைத்தும் போராட்டத்தை நடத்தினர். முடிவில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க மாவட்ட பொருளாளர் மானூத்து பி மகேந்திரன் நன்றி கூறினார்
You must be logged in to post a comment.