சோழவந்தான் பகுதியில் கிராமப்புற மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்ப பயிற்சி அளிக்கும் தன்னார்வலருக்கு பொதுமக்கள் பாராட்டு

மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஹர்சினி கிஷோர் சிங் இவர் கல்வி மற்றும் தொழில் முனைவோற்கான மேலாண்மை படிப்பை பெங்களூர் ஜெயின் பல்கலைக்கழகத்தில் படித்து முடித்த நிலையில் மதுரையில் பல்வேறு கிராம பகுதிகளில் படிக்கும் கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பத்தில் புதிய தொழில்நுட்ப பயிற்சியை இலவசமாக வழங்கி வருகிறார் அதாவது கல்வி இன்டர்நெட் பாதுகாப்பு தொழில்நுட்ப வளர்ச்சி செயற்கை நுண்ணறிவு மெய்நிகர் உணர்வு தொழில் முனைவோர் பயிற்சி ஆகியவற்றை கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி வழங்கி வருகிறார் இதன் தொடர்ச்சியாக மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை கிராமத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட ஏழை மாணவர்களுக்கு கல்வி இன்டர்நெட் பாதுகாப்பு தொழில் முனைவோர் பயிற்சி ஆகியவற்றை வழங்கினார் ஏற்கனவே அவர் பணியாற்றும் நிறுவனம் கர்நாடகாவில் 10,000ற்கும் மேற்பட்ட மாணவர்களை நேரடியாக பயிற்சி மூலம் பயனடைய செய்துள்ளதாக தெரிவித்தார் இவரது பயிற்சியை பாராட்டி ரூரல் டெக் ரைஸ் நிறுவனம் டெல்லியில் நடைபெற்ற சி இன்ஸ்பயர் நிறுவனத்திலிருந்து யூத் ஐகான் விருதை கடந்த மார்ச் எட்டாம் தேதி இவருக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது அவரது பயிற்சியின் முக்கிய நோக்கம் மொபைல் நூலகம் மெய் நிகர் நுண்ணறிவு தொழில் முனைப்பு பயிற்சி ரோபோடிக்ஸ் பயிற்சி ஆகியவை குறிப்பிடத்தக்க பயிற்சியாக பார்க்கப்படுகிறது இவரது இந்த முயற்சிக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!