சோழவந்தான் பசும்பொன் நகரில் அமைந்துள்ள எம் வி எம் கலைவாணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது விழாவிற்கு பள்ளி தாளாளரும் தொழிலதிவருமான டாக்டர் எம் வி எம் மருது பாண்டியன் தலைமை தாங்கினார் நிர்வாகிகள் பாஜக விவசாய அணி மாநிலத் துணைத் தலைவர் மணி முத்தையா வள்ளி மயில் ஆகியோர் முன்னிலை வகித்தனர் பள்ளி முதல்வர் செல்வம் வரவேற்புரை ஆற்றினார் சென்னை உயர்நீதிமன்ற கூடுதல்நீதிபதி ரவி குத்துவிளக்கேற்றி ஆண்டு விழாவை தொடங்கி வைத்ததுடன் வெற்றி பெற்ற மாணவ மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார் ஆண்டு விழாவில் பரதநாட்டியம் கரகாட்டம் கராத்தே யோகா போன்ற நிகழ்ச்சிகளில் மாணவ மாணவிகள் பங்கேற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர் தேசத் தலைவர்களின் வேடமணிந்து நாடகங்கள் நடைபெற்றது சோழவந்தானின் முக்கிய பிரமுகர்கள் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர் சுற்றுப்பகுதியில் உள்ள பெற்றோர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர் மாணவிகள் மற்றும் மாணவர்களுக்கான பயிற்சிகளை ஆசிரியை ஆசிரியர்கள் செய்திருந்தனர் துணை முதல்வர் தீபா ராகினி நன்றி கூறினார்

You must be logged in to post a comment.