என்ன நிகழ்ச்சி நடத்துறீங்க…கலெக்டருக்கே தெரியாம…. அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் பேரூர் செயல் அலுவலரை கடிந்து கொண்ட மாவட்ட ஆட்சியர்

என்ன நிகழ்ச்சி நடத்துறீங்க கலெக்டருக்கே தெரியாம அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் பேரூர் செயல் அலுவலரை கடிந்து கொண்ட மாவட்ட ஆட்சியர்.நிகழ்ச்சி நடப்பது தெரியாமல் வேறு பகுதிக்கு சென்றுஅமைச்சர் வந்த பிறகு தாமதமாக மாவட்ட ஆட்சியர் வந்ததால் அலங்காநல்லூரில் ஏற்பட்ட குழப்பம்


மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேரூராட்சியில் காவல் நிலையம் பின்புறமாக பேரூராட்சி சார்பாக 5.12 கோடி மதிப்பில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பூமிபூஜை விழா இன்று காலை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அலங்காநல்லூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயலட்சுமி மற்றும் அதிகாரிகள் பணியாளர்கள் வந்த நிலையில் அமைச்சர் மூர்த்தி வருவதாக தகவல் கிடைத்தது அந்த நேரத்தில் மாவட்ட ஆட்சியர் சங்கீதாவராததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது

உடனடியாக அதிகாரிகள் மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்ட போது நிகழ்ச்சி நடப்பது தெரியாமல் ஜல்லிக்கட்டை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சிக்கு சென்று விட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது

அப்போது பூமி பூஜை நடைபெறும் இடத்திற்கு அமைச்சர் மூர்த்தி வந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் வராததால் சிறிது நேரம் குழப்பம் ஏற்பட்டது அங்கு வந்த அமைச்சர் மாவட்ட ஆட்சியர் இல்லாதது கண்டு மாவட்ட ஆட்சியர் எங்கே என்று அதிகாரியிடம் கேட்டார் இன்னும் வரவில்லை என்று கூறினார்கள்

பின்பு தாமதமாக வந்த மாவட்ட ஆட்சியர் பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயலட்சுமியிடம் என்ன நிகழ்ச்சி நடத்துகிறீர்கள் மாவட்ட ஆட்சியருக்கே தெரியாமல் என்று அமைச்சர் முன்னிலையில் கடிந்து கொண்டார்

உடனடியாக அமைச்சர் மாவட்ட ஆட்சியருக்கு சொல்லவில்லையா என்று செயல் அலுவலரை பார்த்து கேட்டார் மேலும் பேரூராட்சிகளின் உதவி இயக்குனரும் இல்லாததை கண்ட அமைச்சர் பேரூராட்சிகளின் உதவி இயக்குனருக்கும் தகவல் தெரிவிக்கவில்லையா என செயல் அலுவலரை பார்த்து கேட்டு கோபமான நிலையில் பூமி பூஜையை வேண்டா வெறுப்புடன்தொடங்கி வைத்து கிளம்பிச் சென்றார்

அலங்காநல்லூர் பேரூராட்சி சார்பில் சுமார் 5 கோடி மதிப்பில் தொடங்கப்படும் திட்டத்திற்கான பூமி பூஜைக்கு சம்பந்தப்பட்ட துறையின் உதவி இயக்குனருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை மாவட்ட ஆட்சியருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை இந்த நிலையில் தான் இந்த ஆட்சி நடைபெறுகிறது என்று அங்கிருந்தவர்கள் கூறி சென்றனர் நிகழ்ச்சி முடிந்து கிளம்பிச் செல்லும் போதும் செயல் அலுவலர் அழைத்த மாவட்ட ஆட்சியர் ஏன் தகவல் தெரிவிக்கவில்லை இனிமேல் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் முறையாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமென கூறிச் சென்றார்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!