வாடிப்பட்டி அருகே ஆண்டிப்பட்டி ஊராட்சியில் கழிவுநீர் கால்வாய் பள்ளத்தில் விழுந்து குழந்தை இறந்த சம்பவம் தொடர்பாக ஊராட்சி செயலாளர் வட்டார வளர்ச்சி அலுவலர் மீது பொதுமக்கள் சரமாரி குற்றச்சாட்டு குழந்தை இறந்த இடத்தை பார்வையிட வந்த கிராம நிர்வாக அலுவலரை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆத்திரம்
மதுரை வாடிப்பட்டி அருகே ஆண்டிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கழிவு நீர் குழாயில் அண்ணன் தம்பி விழுந்ததில் அண்ணன் உயிரிழந்த நிலையில் ஆபத்தான நிலையில் தம்பி மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சூழ்நிலையில் ஊராட்சி செயலாளர் வட்டார வளர்ச்சி அலுவலர் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்டோர் மீது பொதுமக்கள் பல்வேறு பரபரப்பு குற்றச்சாட்டு
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ளது ஆண்டிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மட்டமில் பகுதியில் வசிக்கும் சந்தன கருப்பு கிருஷ்ணவேணி தம்பதிகளுக்கு கேசவன் வயசு 4 ரோஷன் வயசு 3 ஆகிய இரண்டு ஆண் குழந்தைகள் இருந்த நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் வீட்டின் அருகே கழிவு நீர் குழாய் கட்டி குழியை மூடாத நிலையில்
கழிவு நீர் தேங்கி இருந்தது
அந்தப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தகுழந்தைகள் இருவரும் குழிக்குள் விழுந்ததில் மூச்சுத் திணறி மயக்கம் அடைந்தனர் இருவரையும் அருகில் உள்ள வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதில் கேசவன் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் மயக்கம் அடைந்திருந்த ரோஷனை முதலுதவி சிகிச்சை அளித்த பின்பு மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் தற்போது அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
இந்த நிலையில் நேற்று இரவு சம்பவம் நடந்த ஆண்டிபட்டி பகுதிக்கு வந்த அதிகாரிகள்
யாரும் இல்லாத நேரம் பார்த்து கழிவுநீர் கால்வாய் குழியை மூடிவிட்டு சென்றுள்ளனர்
இன்று காலை பொதுமக்கள் கழிவுநீர் கால்வாய் மூடி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்து ஊராட்சி செயலாளர் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அதிகாரியின் மீது சரமாரியாக குற்றம்சாட்டினர்
அவர்கள் கூறும் போது கழிவுநீர் கால்வாயை பொதுமக்களாகிய நாங்களே தோன்டியதாக ஊராட்சி நிர்வாகம் சார்பில் கூறப்படுவது முற்றிலும் தவறானது
ஊராட்சி நிர்வாகத்திற்கு தெரியாமல் பொதுமக்கள் எப்படி கழிவு நீர் குழாய் தோன்ட முடியும் மேலும் இரண்டு குழந்தைகள் விழுந்து ஒரு குழந்தை இறந்து மற்றொரு குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் நிலையில் யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக வந்து கழிவு நீர் குழியை மூடிவிட்டுச் சென்றது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது
ஆகையால் சிறுவனின் உயிரிழப்புக்கு காரணமான அனைவர் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இரவோடு இரவாக கழிவுநீர் குழாயை மூடிவிட்டு சென்றவர்கள் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்
சம்பவம் நடந்து இரண்டு நாட்கள் ஆன நிலையில் சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட ஆட்சியர் அதிகாரிகள் யாருமே எங்களை வந்து பார்க்கவுமில்லை எங்களுக்கு ஆறுதல் சொல்லவும் இல்லை ஆகையால் பாதிக்கப்பட்ட எங்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் உயிரானந்த சிறுவனின் பெற்றோருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று குற்ற சாட்டினர் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட வந்த கிராம நிர்வாக அலுவலரே முற்றிய எட்டு சரமாரியாக கேள்வி கேட்டனர் கிராம நிர்வாக அலுவலர் கழிவுநீர் கால்வாய் குளியை இரவோடு இரவாக மூடியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









