சோழவந்தானில் அரசு உதவி பெறும் ஆர் சி நடுநிலைப்பள்ளியில் 71வது ஆண்டு விழா நடந்தது பள்ளி தாளாளர் மார்ட்டின் ஜோசப் தலைமை தாங்கினார். சமயநல்லூர் உதவி பங்குத்தந்தை ராஜா முன்னிலை வகித்தார். ஜெயராணி ஆசிரியை வரவேற்றார். தலைமை ஆசிரியை சாந்திஅமலா ஜோஸ்பின்ஆண்டறிக்கை வாசித்தார். சோழவந்தான் பேரூராட்சி தலைவர் ஜெயராமன், வட்டார கல்வி அலுவலர்கள் ஷாஜகான், அகிலத்து இளவரசி, முன்னாள் தலைமை ஆசிரியர்கள் சபரி முத்து, ஜான்சேவியர், மரியஅந்தோணி ஆகியோர் பரிசு வழங்கினார்கள். முன்னாள் ஆசிரியர்கள் அந்தோணிராஜ், ராஜா, முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் ஆகியோர் பேசினார்கள், ஆசிரியை அமலா ராணி நன்றி கூறினார். இப்பள்ளியில் பணியாற்றி வயது மூப்பால் ஓய்வு பெற்ற வின்சென்ட் பால்ராஜ் ஆசிரியருக்கு சிஎஸ்ஐ தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ராபின் சன் செல்வகுமார், சோழவந்தான் அனைத்து வியாபாரிகள் நல சங்க செயலாளர் ஆதி பெருமாள், இப்பள்ளியைச் சேர்ந்த நிர்வாகிகள், ஆசிரியர், ஆசிரியைகள், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், அவருடைய பணியை பாராட்டி வாழ்த்துரை வழங்கினர்.

You must be logged in to post a comment.