சோழவந்தான் அருகே மன்னாடி மங்கலம் அரசு நடுநிலைப்பள்ளி நூற்றாண்டு விழா விளையாட்டுப் போட்டி ஆண்டு விழா நடந்தது. சோழவந்தான் வெங்கடேசன் எம் எல் ஏ விழாவிற்கு தலைமையேற்று குத்துவிளக்கு ஏற்றி வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மதசார்பற்ற ஜனதா தளகட்சி நிர்வாகி செல்லப்பாண்டி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி ஜெயக்கொடி, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் வக்கீல் முருகன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ரேகாவீரபாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை பூங்கொடி வரவேற்றார். ஆசிரியை காந்தி மீது ஆண்டறிக்கை வாசித்தார். வெங்கடேசன் எம் எல் ஏ, வட்டார கல்வி அலுவலர் ஷாஜகான், சோழவந்தான் பேரூராட்சி தலைவர் ஜெயராமன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் வக்கீல்சத்திய பிரகாஷ், மாவட்ட சீர் மரபினர் நல உறுப்பினர் பேட்டை பெரியசாமி, முள்ளிப் பள்ளம் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கேபிள் ராஜா, காமேஸ்வரன், கல்லாங்காடு முருகேசன் ஆகியோர் பள்ளி நூற்றாண்டு விழா பற்றி சிறப்புரையாற்றி பரிசுகள் வழங்கினார்கள். ஆசிரியை தமிழ்ச்செல்வி நன்றி கூறினார். மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சி நடந்தது. இதில் பெற்றோர்கள், கிராமபொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். காடுபட்டி சப்-இன்ஸ்பெக்டர்கள் பழனிச்சாமி, சேர்வை மற்றும் போலீசார் பாதுகாப்பு பணி செய்து இருந்தனர்.

You must be logged in to post a comment.