மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் கல்லாங்காடு பகுதியில் சித்தாதிபுரம் அருகே வைகை ஆற்றில் இருந்து திருப்பரங்குன்றம் பகுதிக்கு செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு இரண்டு நாட்களாக குடிநீர் வீணாகி சென்ற நிலையில் இதுகுறித்து பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் செய்தியாக வந்திருந்தது இதனை அடுத்து மன்னாடிமங்கலம் கல்லாங்காடு பகுதிக்கு வந்த மதுரை மாநகராட்சி அதிகாரிகள் குழாய் உடைப்பை சரி செய்து குடிநீர் வீணாகாமல் தடுத்து நிறுத்தினர் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி செய்தி எதிரொலி காரணமாக உடனடியாக நடவடிக்கை எடுத்த மதுரை மாநகராட்சி அதிகாரிகளை மன்னாடிமங்கலம் பகுதி பொதுமக்கள் பாராட்டினர் பொதுமக்கள் மேலும் கூறுகையில் இந்த பகுதியில் கனரக வாகனங்கள் அதிக அளவில் செல்வதால்குடிநீர் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாவுதுடன் சாலைகளும் பாதிப்படைகிறது ஆகையால் மணல் அள்ளிச் செல்லும்கனரக வாகனங்கள் மாற்றுப் பாதையில் செல்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் சீரமைக்கப்படாத நிலையில் உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்

You must be logged in to post a comment.