மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் பவர் நர்சரி பள்ளியில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி பள்ளியில் பயிலும் குழந்தைகளின் பெற்றோர்களை அழைத்து மகளிர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. கதை கவிதை கட்டுரை பேச்சுப்போட்டி நடத்தியது சுவாரஸ்யமாக இருந்தது. போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து நடன நாட்டிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது. முதல்வர் ரஜினிகாந்த் தலைமை வகித்தார். துணை முதல்வர் ஜெனகை மாரி முன்னிலை வகித்தார். சமூக ஆர்வலர் முத்துராமலிங்கம் சிறப்புரையாற்றினார். சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட சோழவந்தான் காவல் பணியாளர் ராஜேஸ்வரி, நூலகர் சாந்தி ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவம் அளிக்கப்பட்டது. விழாவில் ஆசிரியர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

You must be logged in to post a comment.