சோழவந்தான் அருகே தென்கரையில் மரக்கன்றுகள் நடும் விழாவிற்கு வருகை தந்த அமைச்சர் மூர்த்தியிடம் சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனை தொமுச சார்பில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது மனுவில் சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனையில் மழைக்காலங்களில் பள்ளங்கள் ஏற்பட்டு சேரும் சகதியுமாக மாறிவிடுவதால் போக்குவரத்து தொழிலாளர்கள் பணி செய்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாகவும் ஆகையால் சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனைக்கு சிமெண்ட் தரைதளம் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்தனர். அருகில் வெங்கடேசன் எம் எல் ஏ ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன் பேரூராட்சித் தலைவர் ஜெயராமன் பேரூர் செயலாளர் சத்திய பிரகாஷ் தொமுச நிர்வாகிகள் தலைவர் அமிர்தராஜ் செயலாளர் பாலசுப்பிரமணியன் பொருளாளர் பாலமுருகன் மத்திய சங்க பிரச்சார செயலாளர் கஜேந்திரன் பொதுக்குழு உறுப்பினர்கள் முனியாண்டி மற்றும் உறுப்பினர்கள் மேல கால் ராஜா . ஹபீப் முகமது மற்றும் பலர் உடன் இருந்தனர்

You must be logged in to post a comment.