சோழவந்தான் அருகே தாராப்பட்டியில் உள்ள அரசு கள்ளர் தொடக்கப்பள்ளியில் நூற்றாண்டு விழா மற்றும் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது விழாவில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டை பெற்றனர் குறிப்பாக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் போன்று பேசி அசத்தினர் முன்னதாகதிருக்குறள் போட்டி கட்டுரை கவிதை இலக்கியப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது விழாவில் பள்ளி தலைமை ஆசிரியை கலைச்செல்வி ஆசிரியைகள் ரேவதி லட்சுமி வசந்தி ஆகியோர்களுக்கு பள்ளி மேலாண்மை குழு தலைவி ராஜேஸ்வரி பள்ளி நூற்றாண்டு விழா நினைவு பரிசு வழங்கினார் விழாவில் முன்னாள் மாணவர்கள் பெற்றோர்கள் கிராம பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

You must be logged in to post a comment.