மதுரையில் பாஜக கையெழுத்து இயக்கத்தை துவங்கி வைத்த பாஜக மாநில செயலாளர் இராம.ஸ்ரீனிவாசன்

மதுரை மாநகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மதுரை சிம்மக்கல் பகுதியில் பாஜக மாநில செயலாளர் இராம.ஸ்ரீனிவாசன் தலைமையில் புதிய கல்விக் கொள்கையை ஆதரித்து கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது, பாஜகவினர் அப்பகுதியில் உள்ள வீடுகள் கடைகள் உள்ளிட்ட இடங்களில் புதிய கல்விக் கொள்கையை ஆதரித்து கையெழுத்துக்களை பெற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இராம.ஸ்ரீனிவாசன் கூறுகையில்._

புதிய கல்விக் கொள்கையை வாயிலாக இந்தியை திணிப்பது போல திமுக கபட நாடகம் ஆடி வருகிறது. இந்தியா முழுவதும் மூன்றாவது மொழியாக இந்திய கற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் கொள்கையாக உள்ளது. திராவிட பூமியான கேரளாவில் மும்மொழி கல்விக் கொள்கை அமுல்படுத்தப்பட்டுள்ளது. தமிழக எல்லை பகுதிகளில் உள்ள கேரளா பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்பட்டு வருகிறது.

50 ஆண்டுகளில் தமிழ் வளர்ந்ததை விட மலையாளம் பன்மடங்கு வளர்ந்துள்ளது. 1965 ஆம் ஆண்டில் அண்ணாதுரை நடத்திய இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் நேர்மை இருந்தது., அவர் எந்த ஒரு இந்தி பள்ளிக்கூடமும் நடத்தவில்லை. ஏதாவது ஒரு இந்திய மொழியை மூன்றாவது மொழியாக கற்றுக்கொள்ள வேண்டும் என கூறுகிறோம்.

தமிழகத்தில் இந்தி கற்றுக் கொள்ள விரும்புவர்கள் இந்தி கற்றுக் கொள்ளட்டும்., அதைத் தாண்டி கன்னடம், தெலுங்கு, உருது, மலையாளம் கற்றுக்கொள்ள விரும்புபவர்கள் அந்தந்த மொழிகளை கற்றுக் கொள்ளலாம். இந்தி கற்றுக்கொள்ள விடாமல் திமுக தமிழக மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது. தமிழகத்தில் பாஜக முதலமைச்சர் பதவியில் இருந்தால் இந்தியா முழுவதும் தமிழை மூன்றாவது மொழியாக கொண்டு வருவோம் என்றார். தமிழகத்தை தாண்டி பிற மாநிலங்களில் தமிழை கற்றுக் கொடுக்க பாஜக கோரிக்கை வைத்து வருகிறது.

பிற மாநிலங்களிலும் தமிழை கற்றுக் கொடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்தந்த மாநில முதல்வரிடம் கோரிக்கை வைக்க வேண்டும். தமிழ் வளர்ச்சித் துறை தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் இருக்க வேண்டும்., புதிய கல்விக் கொள்கை வாயிலாக இந்தியா முழுவதும் தமிழை கொண்டு செல்லக்கூடிய வாய்ப்பாக தமிழக அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி ஆட்சியில் இருந்த திமுக ஏன் கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கவில்லை. கல்வி மாநில பட்டியலில் இருக்க வேண்டும் என்பது திமுகவின் நிலைப்பாடு கல்வி பொது பட்டியலில் இருக்க வேண்டும் என்பது பாஜகவின் நிலைப்பாடு., மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டதால் குஜராத் பொருளாதார ரீதியாக உச்சத்தை தொட்டுள்ளது. உத்தரப்பிரதேசம், பீகார் தொடர்ந்து பின்தங்கி இருந்ததற்கு காங்கிரஸ் ஆட்சி தான் காரணம், மூன்றாவது மொழியாக இந்தியை படிக்க வேண்டுமென புதிய கல்விக் கொள்கையில் எந்த ஒரு தகவலும் இடம் பெறவில்லை.

திமுகக்காரர்கள் நடத்தக்கூடிய மும்மொழி பள்ளியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் மூட முடியுமா.? புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கேரளா கர்நாடகா தமிழ்நாடு கட்சிகள் என ஒவ்வொரு மாநிலங்களில் ஒவ்வொரு நிலைப்பாடு எடுக்கிறது. தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் இரு மொழி கல்வி மட்டுமே கற்று தர முடியும் தமிழக முதலமைச்சரால் அறிவிக்க முடியுமா?, தமிழகத்தில் மூன்றாவது மொழி கற்றுக் கொடுப்பதை தமிழக அரசால் நிறுத்த முடியுமா.?

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகன் பிரான்ஸ் மொழியை மூன்றாவது மொழியாக கற்றுக் கொள்கிறான்.! ஏழை, எளிய மாணவர்கள் மூன்றாவது மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என கூறுகிறோம். இந்தி எதிர்ப்பில் அறிஞர் அண்ணாதுரையிடமிருந்த நேர்மை மு.க.ஸ்டாலினிடம் இல்லை.! அண்ணாதுரை எந்தவொரு இந்தி பள்ளிக்கூடமும் நடத்தாமல் இந்தியை எதிர்த்தார். திமுகக்காரர்கள் நடத்தும் இந்தி பள்ளிக்கூடங்களை மு.க.ஸ்டாலினால் மூட முடியுமா.? என கூறினார்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!