விக்கிரமங்கலம் அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளி அருகில் பெட்டிக்கடை வைத்திருப்பவர் வீரபத்திரன் மனைவி ராஜலக்ஷ்மி நேற்று இரவு மர்ம நபர்கள் இவரது பெட்டிக்கடையில் தீ வைத்ததில்35 ஆயிரம் ரொக்கம் மற்றும் 50 ஆயிரம் மதிப்புள்ள பெட்டிக்கடை எரிந்து நாசமாகி உள்ளது இது குறித்து ராஜலட்சுமி கூறுகையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறேன் எனது உறவினர்களே பெட்டி கடைக்கு தீ வைத்து சென்றுள்ளதாக தெரிகிறது இது குறித்து விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தால் காடுபட்டிக்கு செல்ல வேண்டும் என்றும் காடுபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தால் விக்கிரமங்கலம் காவல் நிலையத்திற்கு செல்ல வேண்டும் என்றும் மாறி மாறி அலைக்கழிக்கின்றனர் மேலும் புகார் மீது எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை எனது வாழ்வாதாரமான பெட்டிக்கடை மற்றும் ரொக்கம் 30 ஆயிரம் தீயில் கருகி நாசமானதால் வாழ்வாதாரம் இழந்து மிகவும் சிரமப்பட்டு வருகிறேன் ஆகையால் காவல்துறையினர் உரிய விசாரணை செய்து தீ வைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் விசாரணை செய்து எனக்கு உயிருக்கு பாதுகாப்பு உத்தரவாதம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்

You must be logged in to post a comment.