மதுரை மாவட்டம் சோழவந்தானில் அருள்மிகு ஸ்ரீ ஜெனகைமாரியம்மன் கோவிலில் திமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. சோழவந்தான் பேரூர் செயலாளர் சத்யபிரகாஷ் தலைமை வகித்தார் பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் அன்னதானத்தை துவக்கி வைத்தார். தொகுதி அமைப்பாளர் தவசதீஷ்குமார் முன்னிலை வகித்தார். பேரூர் ஒருங்கிணைப்பாளர் முத்துப்பாண்டி வரவேற்றார். துணை அமைப்பாளர் அய்யனார், மாவட்ட பிரதிநிதி பேட்டைபெரியசாமி, அலங்காநல்லூர் கிழக்கு ஒன்றிய பொருளாளர் சுந்தர், மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் கார்த்தி அலங்காநல்லூர் ஒன்றியம் ராஜாஜி குகன், இளைஞர் அணி சுந்தர் மாணவரணி யோகேஷ் மற்றும் திமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

You must be logged in to post a comment.