பட்டியல் இன மக்களின் 300 கோடி ரூபாய் சொத்து விடுதலை சிறுத்தைகள் முயற்சியால் மீட்கப்பட்டது-சிந்தனை செல்வன் எம்எல்ஏ

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தேர்தல் ஆணையம் பானை சின்னத்தை ஒதுக்கி அங்கீகாரம் பெற்றதைத் தொடர்ந்து அதனை கொண்டாடும் வகையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. வாடிப்பட்டி ஒன்றிய செயலாளர் தமிழ் நிலவன் தலைமை வககித்தார், மாவட்டச் செயலாளர் சிந்தனை வளவன் முன்னிலை வகித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் தமிழ்நாடு சட்டமன்ற குழு தலைவர் சிந்தனைச் செல்வன் எம்எல்ஏ சிறப்புரை ஆற்றும் போது…

விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழக அரசிடமிருந்து பட்டியலின மக்களுக்காக போராடி பெற்ற திட்டங்களை அடுக்கினார். வெளிநாட்டு படிப்பில் சீர்திருத்தம் சட்டப் போராட்டம் நடத்தி பெறப்பட்டது. வன்கொடுமை தடுப்புச் சட்டம், துப்புரவு பணியாளர்களுக்கு 3600 ஊதியத்திலிருந்து 5000 ரூபாய் ஆக உயர்த்த பாடுபட்டது, மகளிர் உதவித்தொகை 60 வயதுக்கு மேற்பட்ட மகளிர் அனைவருக்கும் வழங்க முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்தது, தர்மபுரி மாவட்டத்தில் பட்டியல் இன மக்களுக்காக ஒதுக்கப்பட்ட சுமார் 300 கோடி மதிப்பிலான நிலத்தை தமிழக அரசிடமிருந்து மக்களுக்கு திருப்பி வழங்கியது. உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அடுக்கினார். தொடர்ந்து தமிழக அரசு பட்ஜெட் தாக்கல் செய்யும்போது மூன்று லட்சம் கோடியில் 2 லட்சம் கோடி அரசு ஊழியர்களின் சம்பளத்திற்கு செல்வதாகவும் மீதமுள்ள ஒரு லட்சம் கோடியில் 200 கோடி ரூபாய் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சென்றடைய வேண்டும் ஆனால் தற்போது 20 கோடி ரூபாய் தான் வழங்கப்பட்டு வருகிறது இதனை சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்று கூறினார். மேலும் தமிழக முதல்வரிடம் வேண்டுகோள் விடுத்து அம்பேத்கர் பெயரில் தொழில் முன்னோடி திட்டம், அயோத்திதாசர் பண்டிதர் பெயரில் வீடு வழங்கும் திட்டம், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சிறப்பு உட்கூறு திட்டம் போன்ற வேண்டுகோளை விடுத்து அதனை சாதித்து காட்டியதாக கூறினார். மேலும் பட்டியல் இன மக்களுக்கு என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணை நிற்கும் என்று கூறினார். விழாவில் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம் எல் ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார். முதன்மைச் செயலாளர் பாவரசு, திமுக வாடிப்பட்டி ஒன்றிய செயலாளர் பாலா ராஜேந்திரன், பேரூராட்சித் தலைவர் பால்பாண்டியன் பேரூர் முன்னாள் திமுக செயலாளர் பிரகாஷ் துணைத் தலைவர் கார்த்தி தமிழ்நாடு விவசாய சங்கம் சீதாராமன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில மாவட்ட ஒன்றிய பேரூர் நிர்வாகிகள் மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!