சோழவந்தான் எம்விஎம் கலைவாணி மெட்ரிக்மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. இவ்விழாவிற்கு எம்விஎம் குழும தலைவர் மணிமுத்தையா தலைமை தாங்கினார். கவுன்சிலர் வள்ளி மயில் முன்னிலை வகித்தார்.பள்ளி தாளாளர் கவுன்சிலர் டாக்டர் மருதுபாண்டியன் அறிவியல் கண்காட்சியை திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கினார். முன்னதாக பள்ளி முதல்வர் செல்வம் வரவேற்றார்.உதவி முதல்வர் தீபாரோகினி நன்றி தெரிவித்தார். இந்த கண்காட்சியில் மாணவ,மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்ட படைப்புகள் செய்து வைத்திருந்தனர். இதை மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கண்டுகளித்தனர். 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகள் சுகாதார ஏற்பாட்டை சீர் செய்வதற்கு புதிதாக கிருமி நாசினிகளை கண்டுபிடித்து கண்காட்சியில் பார்வையிட்ட பெற்றோர்களுக்கு வழங்கினார்கள்.

You must be logged in to post a comment.