சோழவந்தான் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு வழங்கியதை முன்னிட்டு வெற்றிலைக்கு தபால் உறை தபால் துறை சார்பில் சில மாதங்களுக்கு முன்பு வழங்கப்பட்டது இந்நிலையில் இதற்காக முயற்சிகள் மேற்கொண்ட சோழவந்தான் பேரூராட்சி தலைவர் ஜெயராமன் வார்டு கவுன்சிலர் சத்திய பிரகாஷ் மற்றும் வெற்றிலை கொடிக்கால் விவசாய சங்க நிர்வாகிகள் தபால் துறை அலுவலர்கள் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோருக்கு பாராட்டு விழா நடைபெற்றது இந்த விழாவில் அனைவருக்கும் சோழவந்தான் வெற்றிலை படம் பொரித்த தபால் உறை வழங்கப்பட்டது இதில் பேரூராட்சி தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமனிடமிருந்து சோழவந்தான் பகுதி மாலை மலர் நிருபர் குரு ரவி தபால் உறையைப் பெற்றுக் கொண்டார் அருகில் பேரூராட்சி கவுன்சிலர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் மற்றும் கொடிக்கால் சங்க நிர்வாகிகள் முக்கிய பிரமுகர்கள் இருந்தனர்

You must be logged in to post a comment.