மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை

ஆத்தகரப்பட்டியைச் சேர்ந்தவர் தவசி (60).இவர் கடந்த 1980 முதல் எழுமலை மின்வாரியத்தில் மின்பாதை ஆய்வாளராக தற்காலிக ஒப்பந்த பணியாளராக பணிபுரிந்து வந்து தற்போது பணிநிறைவு பெற்றுள்ளார். இலருக்கு கீழ் பணியாற்றுபவர்கள் வயர்மேன் த.தவசி உதவியாளர் கதிரேசன் .இவர்கள் பணிக்கு தாமதமாக வருவதாகவும் வேலையில் அஜாக்ரதையாக இருந்ததாகவும் கூறப்படுகின்றது.இது குறித்து தவசி பலமுறை இவர்களை கண்டித்துள்ளார்.இந்நிலையில் கடந்த 4.6.2022ம் ஆண்டு பணியிலிருக்கும் போது இவர்கள் வேலை செய்யாதது குறித்து தவசி கேட்ட போது இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்ப்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது.இதில் தவசி தவசியை இவர்கள் இருவரும் அடித்து காயப்படுத்தியாக கூறப்படுகின்றது.இதில் காயமடைந்த தவசி எழுமலை காவல்நிலையத்தில் புகார் அளித்து விட்டு மதுரை அரசு மருத்துவமணையில் சிகிச்சை பெற்றுள்ளார்.காவல் துறையின் நடவடிக்கை பயந்து கதிரேசன் என்பவரும் மருந்தை குடித்து அதே மருத்துவமணையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
இந்நிலையில் புகாரை வாபஸ் பெறும்படி மின்வாரிய ஏஇ சுரேஷ் தவசி கதிரேசன் உட்பட 8 பேர் வந்து தவசி மனைவி முனியம்மாள் அவரது மகனிடம் சம்ரசம் பேசியுள்ளனர்.ஆனால் இவர்கள் மறுத்து விட்டனர்.இதனால் தவசிக்கு வர வேண்டிய பணி நிரந்தா வாய்ப்பையும் நிராகரித்து விட்டதாகக் கூறப்படுகின்றது.எழுமலை போலிசார் நடவடிக்கை எடுக்காத நிலையில் இது குறித்தும் எழுமலை மின்வாரியத்தில் இந்த 8 பேரின் ஊழல் குறித்தும் மதுரை மாவட்ட ஆட்சியரிடமும் 150க்கும் மேற்ப்பட்ட புகார் மனுவும் இவரது மனைவி முனியம்மாள் 50க்கும் மேற்ப்பட்ட புகார் மனுவும் அனுப்பியுள்ளார்.இதுவரை நடவடிக்கை இல்லை.மேலும் புகாரை வாபஸ் பெறும்படி எழுமலை காவல்நிலைய அதிகாரிகள் மிரட்டுவதாகவும் கூறப்படுகின்றது.இந்நிலையில் இந்த 8 பேர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் மதுரை ஆட்சியர் அலுவலகம் முன் குடும்பத்துடன் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக தவசி தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment.