,
மதுரை அழகர் கோவில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோவிலில் இந்து சமய அறநிலைதுறை சார்பாக ரூபாய் 19. 49 கோடி மதிப்பீட்டில் கோவிலுக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு சுந்தரராஜா உயர்நிலைப்பள்ளிக்கு நான்கு வகுப்பறைகள், கருணை இல்லத்தில் சமையலறை, உணவருந்தும் கூடம், கருட தீர்த்தம் நடை பாதை மராமத்து , தென்மேற்கு கோட்டைச்சுவர் புனரமைப்பு பணிகளுக்கான தொடக்க விழா மற்றும் பணி நிறைவு பெற்ற மலைச்சாலை புதுப்பித்தல், மழை நீர் வடிகால் மற்றும் பாலம் அமைத்தல், பெரியாழ்வார் திருவரசு மேம்படுத்துதல், நாராயணவாலி தெப்பம் மராமத்து , மூலவாவி தெப்பம் மராமத்து , அம்பு போடும் மண்டபம் புதுப்பித்தல், மேற்கு புற கோட்டைச் சுவர் புதுப்பித்தல் திறப்பு விழாவை காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் மு .க ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார், இந்நிகழ்வில் இணை ஆணையர் செல்லத்துரை, கண்காணிப்பாளர்கள் பிரதீபா, பாலமுருகன், அருள் செல்வன், அறங்காவலர்கள் மீனாட்சி பிரியா, பாண்டியராஜன், செந்தில்குமார், செயற்பொறியாளர் சந்திரசேகர், உதவி செயற்பொறியாளர் கிருஷ்ணன், அறங்காவலர் குழு தலைவர் பிரதிநிதி நல்லதம்பி, மக்கள் தொடர்பு அதிகாரி முருகன், தலைமையாசிரியர் செல்வராஜ் மற்றும் கோயில் ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்,
You must be logged in to post a comment.