மதுரை பைபாஸ் ரோடு பகுதியில் உள்ள தனியார் அறையில் இந்திய அரசு மற்றும் தமிழ்நாடு மாநில மீன்வளத்துறை தேசிய மீன்வள அறுவடை பின்சார் தொழில்நுட்பம் மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் தேசிய மீன்வளம் மேம்பாட்டு வாரியம் சார்பாக அலங்கார மீன் வளர்ப்பு குழுவின் மதிப்பு கூட்டல் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.
இந்நிகழ்வில் மதுரை மாவட்ட வருவாய் அதிகாரி சக்திவேல் தொடங்கி வைத்தார்.தொடர்ந்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஒடிசாவின் முதன்மை விஞ்ஞானி டாக்டர் சரோஜ் குமார் நன்னீர் அலங்கார மீன்களின் இனப்பெருக்கம் மற்றும் வளர்ப்பு வாய்ப்புகள் என்ற தலைப்பில் வண்ண மீன்கள் வளர்ப்பு குறித்து விளக்கி பேசினார்.
அதனைத் தொடர்ந்து அலங்கார மீன் வளர்ப்பில் சமீபத்திய முன்னேற்றம் மற்றும் உங்கள் விலை பொருட்களை எவ்வாறு சந்தைப்படுத்துவது என்பதை பற்றி தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் உதவி பேராசிரியர் ஆனந்த் கூறினார்.
தமிழ்நாடு மீன்வளத்துறை மதுரை மண்டலம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குனர் காசிநாத பாண்டியன் மதுரை அலங்கார மீன்வளக் குழுவை பற்றிய சிறப்பு குறிப்புகள் தமிழ்நாட்டில் அலங்கார மீன்களின் நிலை என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்வில் நபார்டு வங்கியின் துணை இயக்குனர் சக்தி பாலன்,கொச்சியில் உள்ள NIFPHATT ன் செயலாக்க தொழில்நுட்ப வல்லுனர் கமல்ராஜ்,உதவி இயக்குனர் சிவராமச்சந்திரன் ஆய்வாளர் முருகேசன் உட்பட மீன்வளத்துறை அதிகாரிகள்அலுவலர்கள் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
இக்கருத்தரங்கில் அலங்கார மீன் வளர்ப்பின் மதிப்பு கூட்டுதலில் புதுமையான உத்திகளில் கவனம் செலுத்துவது,மேம்படுத்தப்பட்ட இனப்பெருக்க நடைமுறைகள் முதல் தேசிய மற்றும் சர்வதேச சந்தைகளை இருக்கக்கூடிய புதிய தயாரிப்புகள் மற்றும் சேவைகளை உருவாக்குதல் வரை அலங்கார மீன்களின் பொருளாதார மதிப்பை மேம்படுத்துதல் குறித்து பேசப்பட்டது.

You must be logged in to post a comment.