தென்காசி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை மற்றும் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தென்காசி மாவட்டம் முழுவதும் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை செய்ததாக குற்றவாளிகள் மற்றும் நெருங்கிய உறவினர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. தென் மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க் IPS உத்தரவின் பேரில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS அறிவுறுத்தலின் பேரில் மாவட்டம் முழுவதும் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை செய்ததாக பதிவு செய்யப்பட்ட 27 வழக்குகளில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் மற்றும் அவர்களின் நெருங்கிய உறவினர்களான கணவன்,மனைவி மற்றும் பெற்றோர் போன்றவர்களின் 28 வங்கி கணக்குகள் இதுவரை முடக்கப்பட்டுள்ளது. மேலும் வருங்காலங்களில் இதுபோல் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்படும் என்று தென்மண்டல காவல் துறைத் தலைவர் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதே போன்று ஆலங்குளம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த இருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்டம், ஆலங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அடிதடி, கொலை முயற்சி, அரிவாளை காட்டி பணம் பறித்தல் போன்ற தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த சிவலார்குளம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவரின் மகன் சரவணகுமார்(37) மற்றும் மருதையா என்பவரின் மகன் சரவணகுமார் என்ற கொக்கிகுமார் (27) ஆகியோரை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS அறிவுறுத்தியதன் பேரில், மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் பேரில் மேற்படி நபர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுப்புக் காவல் உத்தரவு ஆணையை 28.05.2022 அன்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் காவல் ஆய்வாளர் சந்திரசேகரன் சமர்பித்தார்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









