மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே பாண்டியராஜபுரம் அரசு சர்க்கரை ஆலை இருபாலர் மேல்நிலைப்பள்ளியில் முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக 90 .92 ஆண்டில் படித்த மாணவர்கள் சந்தித்து தங்களது பள்ளிப்பருவ அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.இது ஒருவருக்கு ஒருவர் நெகிழ்ச்சி சம்பவமாக இருந்தது. ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி தங்களது அன்பை பகிர்ந்து கொண்டனர்.தொடர்ந்து இதுபோன்ற சந்திப்புகளை நிகழ்த்தி தாங்கள் படித்த பாண்டியராஜபுரம் சர்க்கரை ஆலை அரசு மேல்நிலைப்பள்ளி வளர்ச்சிக்கு உதவவும் பின்தங்கிய அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உதவவும் உறுதி ஏற்றுக் கொண்டனர்.அரசுப் பள்ளியில் படித்து ஒவ்வொரு துறையிலும் நாங்கள் முன்னேறியது போல் கிராமப்புற மாணவர்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்போம் என்று கூறினார்தொடர்ந்து நினைவு பரிசு வழங்கப்பட்டு அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.முன்னாள் மாணவர்கள்.சின்னமல்லன், மனோகரன், சபி மற்றும் முள்ளிப்பள்ளம் ஊராட்சி மன்ற துணை தலைவர் ராஜா ஆகியோர் மாணவர்களை தொடர்புகொண்டு ஒருங்கிணைத்தனர்இந்த நிகழ்ச்சியில் சபி என்பவர் தனது நிறுவனத்தின் மூலம் அனைவருக்கும் யூனிபார்ம் வழங்கினார் சின்னமல்லன் இனிப்பு வகையான கடலை உருண்டை அனைவருக்கும்வழங்கினார் முன்னாள் மாணவர் மனோகரன் அனைவருக்கும் கேரளா ஸ்வீட் வகைகளை வழங்கினார்முக்கியமாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் மாணவியான தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராக உள்ள கவிதா கலந்துகொண்டு தனது பள்ளி கால அனுபவங்கள் குறித்து முன்னாள் மாணவர்களிடம் எடுத்துரைத்தார் மேலும் தனது பணியிடங்களில் நிலவும் அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார் அனைவருக்கும் தனது சார்பில் இனிப்புவகைகள் வழங்கினார்தற்போது உள்ள ஏழ்மை நிலை.மாணவர்களுக்கு கல்விக்காக தேவைப்படும் உதவிகளை செய்வதாக கூறினார் அவரை முன்னாள் மாணவர்கள் அனைவரும் பாராட்டினர்குறிப்பாக மாறுபட்ட சூழல் நிலவும் இன்றைய காலகட்டத்தில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் சந்தித்து தங்களது மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டது ஒரு மகிழ்ச்சியான நிகழ்வாக இருந்ததுமுன்னாள் மாணவர்கள் சிலர் கூறும்போது ஆண்டுதோறும் தொடர்ந்து இந்த சந்திப்பு நிகழ்வு நடக்கும் என்றும் அடுத்து குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியும் அதை தொடர்ந்து எங்களின் ஆசிரியர்களுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கும் நிகழ்ச்சியும் ஏழை மாணவர்களுக்கு உதவும் நிகழ்ச்சியும் தொடர்ந்து நடத்துவதற்கு நாங்கள் உறுதி எடுத்துள்ளோம் என்று கூறினார்கள்..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









