கறிக் கோழி பண்ணையாளர்களின் தொடர் போராட்டத்தால் கறிக்கோழி விலை உயர வாய்ப்பு.

மதுரை மாவட்டத்தில்,சுமார் 650 க்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகள் மூலம் வாரம் இரண்டு லட்சம் கோழிகளை வளர்த்து விற்பனைக்கு செல்கிறது.இந்தபண்ணை உரிமையாளர்களுக்கு, நாமக்கல் தனியார் கறிக்கோழி கம்பெனிகள் குஞ்சுகளை கொடுக்கின்றனர். குஞ்சுகளை, பண்ணை உரிமையாளர்கள் 45 நாட்கள் வளர்த்து திரும்ப கம்பெனிகளிடம் ஒப்படைக்கின்றனர் அப்போது கிலோவுக்கு ரூபாய் 6.50 கொடுக்கின்றனர். குஞ்சுகளுக்கு தேவையான தீவனம் மருந்து அதிகரித்துவிட்டன.கறிக்கோழிபண்ணை உரிமையாளர்கள் விலை உயர்வு கேட்டு கடந்த 24 நாட்களாக குஞ்சுகளை வாங்க மறுத்து பண்ணைகளை மூடிவிட்டனர் .இந்த தொடர் போராட்டத்தால் ,அடுத்து வரும் காலங்களில் கறிக்கோழி விலை உயர வாய்ப்பு உள்ளதாக பண்ணை உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து ,மதுரை விக்கிரமங்கலத்தைச் சேர்ந்த பண்ணை உரிமையாளர் பால்பாண்டி கூறும்போது:குஞ்சு வளர்ப்புக்கு உரிய விலை தராததால், வங்கிகளில் கடன் வாங்கி தொழில் செய்வோருக்கு நஷ்டம் ஏற்படுகிறது. கிலோவிற்கு ரூபாய் 12 கொடுத்தால்தான் தொழிலை நடத்த முடியும் அரசு கம்பெனி பண்ணையாளர்கள் என முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தால் மட்டுமே தொழிலாளர்கள் பொதுமக்களை பாதிப்பில் இருந்து காக்க முடியும் இது குறித்து, முதல்வர் மற்றும் கால்நடை அமைச்சகத்தில் மனு கொடுத்துள்ளோம் என்றார்.போராட்டம் தீவிரமாகி வருகிறது .பல பகுதியில் குஞ்சுகளை இறக்க எதிர்ப்பு தெரிவித்து திருப்பி அனுப்பியதால், வழக்கு பதிவாகியுள்ளது. போராட்டத்தால் விலை அதிகரித்து வருகிறது .வரும் ,31ம் தேதி காலை சென்னையில் மாநில அளவில் போராட்டம் நடத்த உள்ளோம் என்றார் .இரவு பகலாக பராமரித்து வளர்த்து கொடுத்தால் ஒரு குஞ்சுக்கு ரூபாய் மூன்று தருகின்றனர். கடந்த 25நாட்களாக வேலை இல்லாததால் வாழ்வாதாரம் பாதித்துள்ளது.தமிழக முதல்வராக இருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்த காலத்தில் கறிக்கோழி விலை உயர்த்தப்பட்டது. அதற்கு பின்பு வந்த ஆட்சியாளர்கள் விலையை உயர்த்தாததால், கறிக்கோழி பண்ணை உரிமையாளர்கள் மிகுந்த நஷ்டத்தில் தொழில் செய்து வருகிறோம்.ஆகையால் ,இந்த அரசு.எங்களின்ளின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!