மத்திய அரிசின் சேமிப்பு கிடங்கில் திடீர் தீ விபத்து – விரைந்து செயல்பட்டதால் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிசி மூடைகள் காப்பாற்றப்பட்டன

மதுரை பழங்காநத்தம் பைபாஸ் சாலை பகுதியில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான அரிசி சேமிப்பு கிடங்கு உள்ளது. இங்குள்ள 6 வது பிரிவில் சுமார் 40 ஆயிரத்திற்கும் அதிகமான அரிசி மூட்டைகள் வைக்கப்பட்டிருந்த பகுதியில்  மாலை 6 மணி அளவில் வழக்கமாக குடோனில் பணியாற்றுபவர்கள் பூச்சிமருந்து அடிப்பதற்காக வந்து பார்த்தபோது புகை மூட்டம் ஏற்பட்டு தீ விபத்து ஆனது தெரியவந்தது… இதனையடுத்து துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் மற்றும் மதுரை டவுன் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் செயல்பட்டு தீயை அணைத்தனர் .தொடர்ந்து தீ விபத்தால் சுமார் 100க்கும் மேற்பட்ட அரிசி மூட்டைகள் சேதமடைந்த சுமார் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் குடோனில் இருந்த அரிசி மூட்டைகளை சுமார் 500க்கும் மேற்பட்ட மூடைகளை வெளியே வைத்தனர். அடுத்த ஒரு மணி நேரத்தில் திடீரென பலத்த மழை கொட்டியது .உடனடியாக தார்ப்பாய் கொண்டு அரிசி மூட்டைகளை மூடி வைத்தனர். வெளியிலும் நீர் போக வழி இன்றி நீரில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட அரிசி மூட்டைகள் நனைந்தது. நெருப்பிலும் தண்ணீரிலும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட அரிசி மூட்டைகள் வீணானது .தொடர்ந்து தீ விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையின் போது மின் கசிவின் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது . பல லட்சக்கணக்கான டன் அரிசி உள்ள குடோனில் மேலும் காலாவதியான தீ அணைப்பான் கருவி வெறும் காற்று மட்டுமே அதில் வந்தது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!