தென் தமிழகத்தில் வேலம்மாள் மருத்துவமனை மருத்துவர்கள் முதல் முறையாக கணைய , சிறுநீரக உடல் மாற்று உறுப்பு அறுவை சிகிட்சையில் சாதனை.

மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் தென்தமிழகத்தில் முதன் முறையாக கணையம், சிறுநீரக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிட்சை நடைபெற்றது.வேலம்மாள் மருத்துவமனை மருத்துவர்கள் Dr.செந்தில், Drஆனந்த், Prதினேஷ் மற்றும் மருத்துவ குழுவினர் இணந்து தென் தமிழகத்தில் முதன் முறையாக கணையம், சிறுநீரகஉடல் உறுப்பு மாற்று அறுவை சிகிட்சையில் சாதனை படைத்துள்ளனர்.சர்கரை நோயினால் முதல் கட்டமாக சிறுநீரகம், கண்கள் இதயம், உள்ளிட்ட உடல் உறுப்புகளில் பாதிப்படைந்த ஏராளமானோர் உள்ளனர்.சர்கரை நோயின் முதல் நிலை பாதிப்பால் சிறுநீரக அறுவை சிகிட்சை செய்தவர்களுக்கு மீண்டும் சிறுநீரகம் பாதிப்படையும்.ஆகவே கணையம், மற்றும் சிறுநீரக உடல் மாற்று உறுப்பு அறுவை சிகிட்சை செய்தால் 10 முதல் 12 வருடம் ஆரோக்கியமாக வாழலாம். தெலுங்கான மாநிலம் நெல்லூர் பகுதியை சேர்ந்த சசிகாந்த் (வயது 34)இவர் சிறுநீரகம் பாதிப்படைந்து செயல் இழந்த நிலையில் வேலம்மாள் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட இவர் கணைய சிறுநீரக உடல் மாற்று உறுப்பு அறுவை சிகிட்சை செய்து குணமடைந்தார். இதேபோல் பெங்களுருவை வ சேர்ந்த Dr. பிரித்தா (வயது 32) சர்கரை நோய் பாதிப்பினால் சிறுநீரகம் பாதிப்படைந்தார்.பின்னர் வேலம்மாள் மருத்து குழு மூலம் சிகிட்சை பெற்று ஆரேக்கியமாக உள்ளார்.வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர் செந்தில் மற்றும் தினேஷ் கூறுகையில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பதிவு செய்தவர்கள் கணையம் சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு பின் கூர்ம நலமாக உள்ளனர் வெறும் சிறுநீரக அறுவை சிகிச்சை செய்தால் மட்டும் மீண்டும் தொற்று சர்க்கரை நோயினால் ஏற்பட்டு பாதிப்படையும் ஆனால் சிறுநீரக மாற்று அறுவை செய்து 10 முதல் 12 ஆண்டுகள் வரை நலமுடன் வாழலாம்.மேலும் சர்கரை நோயைகட்டுக்குள் கொண்டுவந்து டயாலிசிஸ் போன்றவை செய்யவேண்டிய அவசியம் இல்லை.மேலும் மற்ற அறுவை சிகிச்சைகளைப் காட்டிலும் கணைய, சிறுநீரக அறுவை சிகிட்சை செய்வதால் சர்கரை நோய் முதல்நிலை பாதிப்படையும் 40 வயதிற்குட்பட்ட முதல் நிலை நோயாளிகள் இந்த அறுவை சிகிட்சை மூலம் பூரண குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!