பெட்ரோல் வாகனம் விற்பனை அதிகரிக்க பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் இருசக்கர வாகன பழுது பார்ப்போர் சங்கம் சார்பாக மத்திய மாநில அரசுக்கு கோரிக்கை.

மதுரை மண்டல இருசக்கர மோட்டார் வாகன பழுது பார்ப்போர் நல சங்கம் சார்பாக ஐந்தாம் ஆண்டு விழா மதுரை அவனியாபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றதுஇந்த நிகழ்ச்சியில் இச்சங்கத்தின் முன்னாள் தலைவர் பாஸ்கர் தலைமையில் தலைவர் திருப்பதி செயலாளர் செந்தில்குமார் துணைத்தலைவர் மாருதியின் உள்ளிட்டோர் முன்னிலையில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் அவனியாபுரம் காவல் ஆய்வாளர் சந்திரன் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கப்பாண்டி உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.தொடர்து நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளரை சந்தித்து கூறியதாவது:-பெட்ரோல் விலை உயர்வால் மின்சார வாகனம் (இ-பைக்) விற்பனை அதிகரித்து வருகிறது இந்த வாகனத்தால் இருசக்கர வாகனம் பழுது பார்ப்போர் மிகவும் பாதிப்படைய வாய்ப்புள்ளது.எனவே பெட்ரோல் விலையை குறைத்தால் மட்டுமே பெட்ரோல் வாகனம் விற்பனை அதிகரிக்கும் எனவே மத்திய மாநில அரசுகள் பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்து காவலர் கூறுகையில் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் இடத்தில் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சைலன்சர் பொருத்துவதை தவிர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.தற்போது அதனை ஏற்றுக் கொண்டு இனிவரும் காலங்களில் கூடுதல் சைலன்ஸர் பொருத்துவதை தவிர்ப்பதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்..,

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!