மதுரையில் முறையாக அனுமதி பெறாத தனியார் வளர்ப்பு யானையை பல மணி நேர போராட்டத்திற்கு பின்பு முகாமிற்கு அனுப்பி வைப்பு.

மதுரை தமுக்கம் மைதானம் அருகே கமலா நகரில் உள்ள மாலா என்பவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் பீகாரிலிருந்துரூபாலி என்ற பெண் யானையை வாங்கி வளர்த்து வருகிறார்.இந்நிலையில் இவர் முறையான அனுமதி இல்லாமலும் முறையான ஆவணங்கள் இல்லாமலும் யானையை வாங்கி வந்து வளர்ப்பதாகவும், கோவில் விழா மற்றும் பிச்சை எடுக்க பயன்படுத்துவதாக புகார் எழுந்ததை தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் யானை வளர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.யானையின் உரிமையாளர் தரப்பில் நீதிமன்றத்தை நாடியதை தொடர்ந்து மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் யானை வாங்கியது தொடர்பாக வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.இந்நிலையில் வளர்ப்பு யானையான ரூபாலி உரிய பராமரிப்பு இல்லாமல் இருப்பதை கருத்தில் கொண்டு வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தலைமை வன பாதுகாவலர் உத்தரவின்படி யானையை திருச்சியில் உள்ள எம்.ஆர்.பாளையம் யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்திற்கு அழைத்து செல்ல மாவட்ட வனத்துறை அதிகாரி குருசாமி தபாலா தலைமையில்வனத்துறைஅதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் வந்திருந்தனர்.யானையை அழைத்து செல்வதற்கான விளக்க நோட்டீஸை யானையின் உரிமையாளர் மாலா வாங்க மறுத்ததால் கதவில் ஒட்டிய வனத்துறையினர் யானையை அழைத்து செல்ல முயன்றனர். அப்போது யானை உரிமையாளர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளபோது வனத்துறையினர் யானையை அழைத்து செல்வதாக குற்றம் சாட்டிய அவர் யானைக்கு உடல்நலக் குறைவு உள்ள நிலையில் அதற்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவ சிகிச்சை பெற்று வரும் யானையை வேறு இடத்திற்கு மாற்றக் கூடாது என்ற விதிமுறையை வனத்துறையினர் மீறுவதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.இதனிடையே யானையை அழைத்து செல்லும் நடவடிக்கையில் வனத்துறை அதிகாரிகள் ஈடுப்பட்ட நிலையில் யானை பாகனை தலைமறைவாகி விட்டார்.யானையை லாரியில் ஏற்ற முடியாமல் அதிகாரிகள் தவித்தனர். வேறொரு யானை பாகனை கூட்டி வந்து யானையை லாரியில் ஏற்றி திருச்சிக்கு கொண்டு சென்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!