சிலைமான் காவலர் எஸ்.டி.பி.ஐ கட்சியினரை அவதூறாக பேசியதாக. காவல் நிலையம் முன்பு முற்றுகை போராட்டம்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா சிலைமான் பகுதியில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதி, குற்றச்செயல்கள் குறித்து ஊராட்சி மன்ற தலைவர்கள் அரசு அதிகாரிகள் உள்ளிட்டவர்களை எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக கட்சி நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து குறைகளை எடுத்து கூறினர்.இது சம்பந்தமாக எஸ்டிபிஐ கட்சியினர் சிலைமான் காவல் ஆய்வாளரை சந்திக்கச் சென்றபோது. காவல் நிலையத்தில் இருந்த காவலர் மீனாட்சி கந்தரம் என்பவர் எஸ்டிபிஐ கட்சியினரை வரம்புமீறி தரைகுறைவாக பேசியதாக கூறப்படுகிறது ‌எனவே எஸ்டிபிஐ கட்சியின் மதுரை ஒருங்கிணைந்த தெற்கு, வடக்கு மாவட்டத்தின் சார்பாக ஜனநாயக முறையில் மதுரை சிலைமான் காவல் நிலையத்திற்கு நேற்று இரவு முன்பாக கோஷங்கள் எழுப்பி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்துபோக செய்தனர்.காவல் நிலைத்தில் காவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்பாட்டம் செய்ததால் இப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!