தனக்கன்குளம் பகுதியில் ஆக்கிரமிப்பாளர்களை அகற்றச் சொல்லி கல்லூரி மாணவ மாணவிகள் திடீர் சாலை மறியல் .

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவிற்கு உட்பட்ட தனக்கன்குளம் பகுதியில் தனியார் பிசியோதெரபி கல்லூரி உள்ளது. இங்கு 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர்.இந்த நிலையில் கல்லூரி வாசலில் 30 அடிக்கு நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடம் உள்ளது.இந்த இடத்தை முன்னால் தனக்கன்குளம் ஊராட்சி தலைவர் கருத்த கண்ணன் (அதிமுக பிரமுகர்,) சொந்தம் கொண்டாடுவதாக கூறப்படுகிறது.இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் மற்றும் அருகில் உள்ள குடியிருப்புவாசிகள் சேர்ந்து சட்டப்படி நடவடிக்கை எடுத்து இந்த பாதையை யாரும் சொந்தம் கொண்டாடக்கூடாது என்று அறிவிப்பு பலகை வைத்ததாக கூறப்படுகிறது.மேலும் இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கருத்த கண்ணன் அனுப்பியதாக கூறி 3 லாரிகள் மற்றும் ஜேசிபி வாகனத்தோடு வந்து பத்துக்கும் மேற்பட்டோர் கல்லூரி வளாகத்தை மறித்து வாகனங்களை நிறுத்தி தகராறு செய்துள்ளனர்.மேலும் அவர்கள் மது அருந்துவது மற்றும் அங்கு வரும் மாணவிகளை கிண்டல் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தததாக கூறப்படுகிறது.இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மாணவிகள் இன்று திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பரங்குன்றம் சரக காவல் உதவி ஆணையர் ரவி மற்றும் , தெற்கு வாசல் சரக காவல் உதவி ஆணையர் சண்முகம், திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் சுந்தரி உள்ளிட்டோர் மாணவர்களிடம் பேசி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து மாணவர்கள் அமைதியாக கலைந்து சென்றனர். கல்லூரி வாசலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சொல்லி கல்லூரி மாணவர்கள் திடீர் என்று மதுரை கன்னியா குமரி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!