மகாகவி பாரதியார் மற்றும் அவரது மனைவி செல்லம்மாள் ரதம் மதுரை வருகை: மாணவிகள் கும்மிக்கொட்டி பாரதியார் புகழ்பாடினர்.

மகாகவி பாரதியாரின் மனைவி செல்லம்மாள் தென்காசி மாவட்டம், கடையம் பகுதியைச் சேர்ந்தவராவார் என்பதாலும் சுப்பிரமணிய பாரதியார் பல ஆண்டுகள் கடையத்தில் வசித்த போது அவரது கவி பாடும் திறமையை வெளி உலகத்துக்கு எடுத்துச் செல்ல மனைவி செல்லம்மாள் உந்து சக்தியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.சேவாலயா டிரஸ்டி யினர் பாரதியார், அவரது மனைவி செல்லம்மாள் திருவுருவ சிலையுடன் ரதம் புறப்பட்டது.சென்னை திருநின்றவூரில் இருந்து கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி புறப்பட்ட ரதம் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று இன்றுமதுரை கல்லூரிக்கு வந்தது. கல்லூரி தாளாளர் முதல்வர் மற்றும் மாணவ மாணவியர்கள் பாரதியார் இயற்றிய பாடல்களை பாடி, கும்மிக்கொட்டி புகழ்பாடினர்.முன்னதாக பாரதி யுவகேந்திரா அமைப்பின் நிறுவனர் நெல்லை பாலு, கல்லூரி தாளாளர் நடனகோபால் வரவேற்றார்கல்லூரி முதல்வர் சுரேஷ்,உள்ளிட்டோர் மலர் தூவி வரவேற்றனர்.இந்த ரதம் குறித்து சேவாலயா துணைத் தலைவர் கிங்ஸ்டன் பேசிய போது பாரதியாரின் மனைவி செல்லம்மாவின் பிறந்த ஊரான கடையத்தில் நினைவுச் சின்னங்கள் எதுவும் இல்லை.இதனால் கடையத்தில் பாரதி நூலகம், அருங்காட்சியகம், ஆய்வு மையம் மற்றும் பாரதி தொடர்பான கருத்தரங்கு, கவியரங்கு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான மையம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவருகிறது. அந்த கட்டிடத்தின் செல்லம்மா – பாரதி சிலையை நிறுவ திட்டமிட்டு உள்ளதாகவும், இந்த ரதயாத்திரை வருகிற 31 ஆம் தேதி கடையத்துக்கு சென்றடையும் என்றும்.வருகிற ஜூன் மாதம் 27 ஆம் தேதி பாரதி- செல்லம்மா சிலையை திறந்து வைக்க தமிழக முதல்வரிடம் அனுமதி கேட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!