காடுபட்டி ஊராட்சியில் தலைவர் மற்றும் துணைத்தலைவர் இடையே தொடரும் மோதல் .ஊராட்சி பணிகள் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் கவலை.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் காடுபட்டி ஊராட்சியில் தலைவர் துணைத் தலைவர் ஆகியோரின் மோதல் போக்கு மற்றும் பணி போரால் ஊராட்சி நிர்வாகம் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர் அதிகாரிகள் தலையிட்டு ஊராட்சி நிர்வாகத்திற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றனர்.ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன் துணைத் தலைவர் மீது ஊராட்சி பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை முறையாக ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கு கூட்டத்தில் சார்க் அமைப்பை ஏற்படுத்தி வருகிறார் ஊராட்சி நிர்வாகத்திற்கு எதிராக பொதுவெளியில் பேசி வருகிறார் என்று குற்றம் சாட்டுகிறார்.ஊராட்சி துணைத் தலைவர் பிரதாப் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன் தனக்கு நிர்வாகத்தில் நடப்பவை குறித்து எந்தவித தகவலும் தெரிவிக்கவில்லை என்றும் எனது கையெழுத்து மோசடியாக போடப்படுகிறது என்றும் எனது வார்டு பகுதியில் உள்ள மக்களுக்கு 100 நாள் வேலைத்திட்டம் குடிநீர் வழங்கும் திட்டம் கழிப்பறை கட்டும் திட்டம் ஆகியன செயல்படுத்தப்படாமல் உள்ளது என்று தலைவர் மீது குற்றம் சாட்டுகிறார். இருவரும் பரஸ்பரம் குற்றம் சாட்டி ஊராட்சி நிர்வாகத்திற்குத் தேவையான நிதியை பெறுவதில் சிரமம் ஏற்படுத்தி வருவதாகவும் இதனை அதிகாரிகள் கண்டித்து உடனடியாக ஊராட்சி பணிகளை முடுக்கி விடும்படியும் கூறுகின்றனர் இப்பகுதி பொதுமக்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!