மதுரை வடக்கு ரோட்டரி சங்கம் சார்பில் மினி மராத்தான் போட்டி.6 ஆயிரம் பேர் பங்கேற்பு.

மதுரை வடக்கு ரோட்டரி சங்கம் மற்றும் ஒத்தக்கடை போக்குவரத்து காவல் நிலையம் இணைந்து மதுரை ஒத்தக்கடையில் மினி மராத்தான் போட்டி நடை பெற்றது. இதில் ஆண்களுக்கு தனியாகவும் பெண்களுக்கு தனியாகவும் இப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார் இந்நிகழ்வில் மதுரை வடக்கு ரோட்டரி சங்க தலைவர் செந்தில்குமார் செயலாளர் பொன் வெற்றிச்செல்வன் பொருளாளர் தண்டபாணி மராத்தான் கமிட்டி சேர்மன் மனோஜ் குமார் முன்னாள் தலைவர் டாக்டர் பழனிவேல் ராஜன் முன்னாள் தலைவர் இளஞ்செழியன் முன்னாள் தலைவர் சரவணராஜ் மற்றும் பொறியாளர் பழனிச்சாமி அனைத்து ரோட்டரி சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர். மராத்தான் போட்டியில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் பங்கேற்றனர் பரிசளிப்பு விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் ரோட்டரி மாவட்ட ஆளுநர் டாக்டர் ஜெயக்கண் மதுரை அரசு ராஜாஜி பொது மருத்துவமனை டீன் டாக்டர் ரத்தினவேல் மாவட்ட ஆளுநர் தேர்வு நியமனம் பேராசிரியர் ராஜா கோவிந்தசாமி டாக்டர் பழனிவேல் ராஜன் உட்பட பலர் பங்கேற்றனர் ஆண்களுக்கான பிரிவில் முதல் பரிசினை விருதுநகரைச் சேர்ந்த மாரி சரத் இரண்டாவது பரிசினை கோயம்புத்தூரைச் சேர்ந்த ரஞ்சித் மூன்றாவது பரிசினை பாலக்காட்டைச் சேர்ந்த அஜித் ஆகியோர் பெற்றனர். பெண்களுக்கான மாரத்தான் போட்டியில் முதல் பரிசினை மதுரையைச் சேர்ந்த கவிதா இரண்டாவது பரிசினை கோயம்புத்தூரைச் சேர்ந்த சௌமியா மூன்றாவது பரிசினை திருச்சியைச் சேர்ந்த கீதாஞ்சலி பெற்றனர் போட்டியில் முதல் பரிசு ரூபாய் 20 ஆயிரம் 2-வது பரிசு ரூபாய் 10 ஆயிரம் 3-ஆவது பரிசு ரூபாய் 5000 வழங்கப் பட்டது..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!