ஆதரவற்றவர்களுக்கு ஆதரவாய் நேசக்கரம் நீட்டிய எஸ்.டி.பி.ஐ.

மதுரை (வடக்கு) சத்தியாநகர் கிளை நிர்வாகிகள் மதுரை கல்மேடு நகர் பகுதியில் இறந்த இந்து சகோதரர் உடலை நல்லடக்கம் செய்த இஸ்லாமியர்கள். மதுரையில் நெகிழ்ச்சி சம்பவம்:மதுரை கல்மேடு நகர் பகுதியில் தொலைக்காட்சி பழுது நீக்கும் பணிபுரிந்தவர் சாரதி வயது ஈ(45) அவர் இன்று சிறுநீரக கோளாறு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் உறவினர்கள் எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்டதன் பேரில் அப்பகுதியை சேர்ந்த ஜமாத்தார்கள் முழு ஒத்துழைப்புடன் ஆதரவின்றி யாரும் இறக்க கூடாது என்ற ஒற்றை நோக்கத்தோடு இறந்தவரின் உடல் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் உடனடியாக ஸ்ட்ரெச்சர் வாடகைக்கு எடுத்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சுமந்து சென்று முழு செலவுகளையும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் நிர்வாகிகள் மனித நேயத்துடன் ஏற்றுக் கொண்டு இந்துக்கள் மத வழக்கத்தின்படி உறவினர்களுடன் இணைந்து மாலை மரியாதையுடன் கல்மேடு மயானத்தில் நல்லடக்கம் செய்தனர்எஸ்.டி.பி.ஐ கட்சி சத்யா நகர் கிளை ஒருங்கிணைப்பாளர் சீனி சிக்கந்தர், கிளை தலைவர் அப்துல் கரீம், துணை தலைவர்- செல்வ கனி, அப்துல் வாஹித் செயலாளர்- ஜாபர் சாதிக் வர்த்தக அணி- தஸ்தகீர் பொருளாளர் முகமது அலி, பட்டறை ஜாபர், நிஜாம் மேலும் அல் ஜாமியா சுன்னத்துல் ஜமாத் செயலாளர் அப்துல் காதர் , பொருளாளர் கனி அப்துல்லா, மற்றும் கட்சியின் செயல்வீரர்கள் ஜமாஅத் நிர்வாகிகள் கலந்து கொண்டு உடலை நல்லடக்கம் செய்து மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்சிக்கந்தர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செய்திகள்-பிரிவு மதுரை வடக்குசோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!