மதுரை ஆதீனத்தை மரியாதை நிமித்தமாக எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

292 வது மதுரை ஆதினம் அருணகிரிநாதர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உடல்நலக்குறைவால் முக்தியடைந்த நிலையில், மதுரை ஆதீனத்தின் 293வது குருமகா சன்னிதானமாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பராமாசாரிய சுவாமிகள் பொறுப்பேற்றார்.292 வது மதுரை ஆதீனம் அனைத்து சமுதாயத்தினருடன் நல்லுறவை பேணிக்காத்து வந்த நிலையில், புதிதாக பொறுப்பேற்ற 293 வது ஆதீனம் பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் மதுரை ஆதீனத்தை எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினர்., எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் முஜிபுர் ரகுமான், மதுரை தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர், வடக்கு மாவட்ட தலைவர் பிலால்தீன், அப்துல் சிக்கந்தர் ஆகியோர், மதுரை ஆதீனமாக பதவியேற்றதுக்கு அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்ததோடு, சமூக நல்லிணக்கம் குறித்து விரிவாக பேசியதாகவும் கூறப்படுகிறது.எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் மதுரை ஆதீனத்தை சந்தித்த போது மதுரை ஆதீனம் தான் வைத்திருந்த இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குரானை வாசித்துக் காட்டியுள்ளார். மேலும் தன்னை சந்திக்க வந்த எஸ்டிபிஐ கட்சியினருக்கு , குங்குமம் திருநீறு கொண்ட பிரசாத பையை வழங்கினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!