திராவிட கட்சிகளின் தயவில்லாமல் தமிழகத்தில் தேசியகட்சிகள் காலூன்ற முடியாது: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ திட்டவட்டம்.

மதுரை, சோழவந்தான் அருகே தாராபட்டி,கீழமாத்தூர் , துவரிமான் பகுதியில் முன்னாள் கூட்டுறவு துறை அமைச்சர்செல்லூர் கே.ராஜூ தனதுசட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து, 37 லட்சம் ரூபொதுமக்களுக்கான நலதிட்டங்களை தொடங்கி வைத்தார்.பின்னர், செய்தியாளர்களிடம் பேசியதாவது:-தமிழக அமைச்சர்களுக்கு ஆங்கிலம் தெரியவேண்டிய அவசியமில்லை. தங்களது, துறையில் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து, சிறப்பாக செயல்பட கவனம் செலுத்தினால் போதும்.தொண்டர்களுக்காகவும்,கட்சி வளர்ச்சி அடைவதற்காகவும்,பாஜக விரைவில் ஆட்சி அமைக்கும் என அண்ணாமலை கூறி வருகிறார். அவருடைய தனிப்பட்ட கருத்து.ஆனால் ,திராவிட கட்சிகளின் தயவில்லாமல் தமிழகத்தில் தேசியகட்சிகள் காலூன்ற முடியாது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ திட்டவட்டமாக தெரிவித்தார்.ஓராண்டு திமுக ஆட்சி விடியல் தராத விளம்பர ஆட்சி என்றார்.திருநெல்வேலி மாவட்டத்தில், நடைபெற்ற கல்குவாரி விபத்து குறித்து முதல்வர் தீவிர விசாரணை செய்ய வேண்டும்.ஊராட்சி மன்ற பெண் தலைவர்களின் கணவர்கள் மற்றும் சகோதரர்கள் நிர்வாகத்தில் ஈடுபடுவதை முதல்வர் கவனிக்க வேண்டும்.மக்களுக்கு பயன்பட்டுத்திவந்த அம்மாகிளினிக்குகளை மூடுவதை அரசு கைவிட வேண்டும் ,சிறு மாறுதல்கள் கூட செய்து அம்மா கிளினிக் திட்டம் தொடர வேண்டும்.மதுரை தெப்பக்குளம் மின்னொளி அமைத்து மக்கள் பொழுதுபோக்கு இடமாக மாற்ற வேண்டும் என்றார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!