சிதம்பரம் நடராஜரையும், தில்லை காளியையும் அவதூறாக பேசியவரை சூரசம்காரம் செய்ய அனுமன் சேனா சார்பாக திருப்பரங்குன்றம் கோவிலில் வேல் காணிக்கையாக வழங்கப்பட்டது.

சிதம்பரம் நடராஜரையும் ,தில்லை காளியும் அவதூறாக பேசிய வரை தமிழக அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை எனவே, கடவுளை தண்டிக்க சூரசம்காரம் செய்வதற்காக அனுமனைக் சேனா சார்பாக திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் 5 அடி வேல் காணிக்கையாக வழங்கினர்.இதற்காக, திருப்பரங்குன்றம் அருகே உள்ள சொக்கநாதர் கோயிலில் இருந்து 5 அடி வேலுக்கு பூஜைகள் செய்யப்பட்டு, திருப்பரங்குன்றம் கோவில் வாசலில் யாத்திரையாக வந்து முருகனுக்கு வேலை காணிக்கையாக செலுத்தினர்.இதுகுறித்து, அனுமன் சேனா நிர்வாகிகள் கூறுகையில்..தற்போதைய ,தமிழக அரசு இந்திக்கு எதிரான அரசாக செயல்பட்டு வருகிறது .தற்போது ,சிதம்பரம் நடராஜரையும், தில்லை காளியையும் அவதூறாக பேசிய அவர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், எனவே ,அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து சூரசங்காரம் செய்வதற்காக அனுமன் சேனா சார்பாக மேல் காணிக்கையாக வழங்குகிறோம். தொடர்ந்து, இந்துக்களுக்கு எதிராக தமிழக அரசு செயல்படுவதாகவும் இது மிகவும் கண்டிக்கத்தக்கது என, கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!