மதுரையில் பட்டா மாற்று செய்து தர 5000 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது.

மதுரை பழங்காநத்தம் சேர்ந்தவர் சுகுமாறன்.இவர் மாடக்குளம் பகுதியில், உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில், தான் புதிதாக வாங்கிய வீட்டிற்கு பட்டா பெற வேண்டி அணுகியுள்ளார்.அப்பொழுது, அங்கு சர்வேயர் பணியில் இருந்த பாலமுருகன் பட்டா மாற்றம் செய்து தர 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து சுகுமாரன் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் செய்தார். இதனையடுத்து, லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரின் ஆலோசனைப்படி, சுகுமாரன், சர்வேயர் பாலமுருகனுக்கு 5,000 ரூபாய் லஞ்சம் கொடுக்கும் போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!