அவனியாபுரம் அருகே அமைந்துள்ள குடியிருப்பு பகுதியில் நள்ளிரவில் பைக் திருட்டு சிசிடிவி காட்சிகள் வெளியீடு.

மதுரை அவனியாபுரம் அருகே அமைந்துள்ள தனியார் குடியிருப்பு பகுதிக்குள் கட்டிட பொறியாளராக பணிபுரிந்து வருகிறார் மதுரை அவனியாபுரம் அருகே உள்ள சௌபாக்கியா நகர் அருகே வாசுகி தெரு பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவரது மகன் 41 வயது காமாட்சி சுந்தரம். இவர் நேற்று இரவு தனது வேலை வேலையை முடித்துவிட்டு வீட்டின் வாசலில் விலையுயர்ந்த யமஹா இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் சென்றுவிட்டார் இந்த நிலையில் இன்று காலைஅவர் பைக் நிறுத்தி வைத்திருந்த இடத்தில் வாகனம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நிலையில்., உடனடியாக அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டார். அதில் யாரோ ஒரு வாலிபர் குடியிருப்பு பகுதிக்குள் உள்ளே வந்து அவருடைய பைக்கை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.இதுகுறித்து காமாட்சி சுந்தரம் அவனியாபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சிசிடிவி காட்சிகள் உதவியுடன் அவனியாபுரம் குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

. செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!