மதுரையில் உரமூட்டைகளை ஏற்றி வந்த லாரி விபத்துக்குள்ளன பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியீடு.

மதுரை பாலரங்காபுரம் லாரி குடோனில் இருந்து கரூருக்கு உரமூட்டை ஏற்றி சென்ற லாரி அரசரடி பிரதான சாலையில் அதிகாலையில் சென்று கொண்டிருந்த லாரி ஓட்டுநர் சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரை கவனிக்காத நிலையில், அந்த லாரி தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.தொடர்ந்து லாரியின் முன் பக்கம் முற்றிலுமாக சேதம் அடைந்த நிலையில் லாரி சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக சம்பவ இடத்திலேயே இருந்துள்ளது. தொடர்ந்து குடோனில் இருந்து மாற்று லாரி வரவழைக்கப்பட்டு உர மூட்டைகளை இடமாற்றம் செய்ததற்குப் பிறகு லாரியை பொக்லைன் இயந்திரம் கொண்டு சாலையிலிருந்து அப்புறப்படுத்தினர்.இதுதொடர்பாக மதுரை போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து லாரி விபத்துக்குள்ளான பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!